திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று இயங்கி வந்தது. இந்த ரயில் தற்போது விரைவு ரயிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வழக்கமான ரயில் சேவை துவங்கும் போது இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஜனவரி 4ம் தேதி முதல் பகல் நேர சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும், 06849 திருச்சி ➡️ ராமேஸ்வரம் சிறப்பு ரயில், அன்றைய தினம் பகல் 12:15க்கு ராமேஸ்வரம் சென்றடையும்

மறுமார்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 2:35க்கு புறப்படும், 06850 ராமேஸ்வரம் ➡️ திருச்சி சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 8:05 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட குளிர்சாதன வசதி பெட்டியும், ஏழு இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை விவரம் பின்வருமாறு ;