இந்நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாஸ் சிறப்பு சரக்கு ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த சரக்கு ரயில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை இரவு, 8.00 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை, 5.00 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட் சென்றடையும்.
மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் ராஜ்கோட்டில் இருந்து காலை, 8.00 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு, 8.35 மணிக்கு கோவை, வடகோவை ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூர் - வஞ்சிப்பாளையம், ஈரோடு - ஈங்கூர், சூரத் - உத்னா, அங்கலேஸ்வர் - பரு சந்திப்பு, ஆமதாபாத் - கங்காரியா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த நிகழ்ச்சியில், கோட்ட வணிக முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட சேலம் ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு ரயிலில் பார்சல் அனுப்புவதற்கு ஸ்டார் அஸோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை 8111000199 மற்றும் 8111000195 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.