ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

முன்பதிவு ஜன 6ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


விசாகப்பட்டினம் 🔄 கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்.

விசாகப்பட்டினத்திலிருந்து வியாழன் கிழமைதோறும் புறப்படும் விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர சிறப்புக் கட்டண பண்டிகைக் காலச் சிறப்பு ரயில் சேவை ஜன 14ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் கொல்லம் ரயில் நிலையத்தில் புறப்படும் கொல்லம் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் ஜன 15ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை 👇 


விசாகப்பட்டினம் 🔄 சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்.

விசாகப்பட்டினத்திலிருந்து வெள்ளி கிழமைதோறும் புறப்படும் விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்புக் கட்டண பண்டிகைக் காலச் சிறப்பு ரயில் சேவை ஜன 15ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் சனிக்கிழமைதோறும் கொல்லம் ரயில் நிலையத்தில் புறப்படும் சென்னை சென்ட்ரல்  - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் ஜன 16ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் அட்டவணை 👇