அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகளிலும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 10) காலை 8 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வண்டி எண் 06091 சென்னை எழும்பூர் ➡️ நாகர்கோவில் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 10:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:10க்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்கத்தில், வண்டி எண் 06092 நாகர்கோவில் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:45க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:40க்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும.
இந்த ரயிலின் முழுமையான அட்டவணை 👇
06091 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் ⬇️ | ரயில் நிலையம் | 06092 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் ⬆️ |
---|---|---|
22:30 | சென்னை எழும்பூர் | 3:40 |
22.58/23.00 | தாம்பரம் | 02.48/02.50 |
23.28/23.30 | செங்கல்பட்டு | 02.18/02.20 |
00.50/00.55 | விழுப்புரம் | 00.45/00.50 |
01.43/01.45 | விருத்தாசலம் | 23.28/23.30 |
03.40/03.45 | திருச்சி | 21.55/22.00 |
05.10/05.15 | திண்டுக்கல் | 20.33/20.35 |
06.25/06.30 | மதுரை | 19.25/19.30 |
07.18/07.20 | விருதுநகர் | 18.03/18.05 |
07.48/07.50 | சாத்தூர் | 17.28/17.30 |
08.13/08.15 | கோவில்பட்டி | 17.08/17.10 |
09.30/09.35 | திருநெல்வேலி | 16.10/16.15 |
11:10 | நாகர்கோவில் | 14.45 |
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 10) காலை 8 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.