ராமேசுவரத்திலிருந்து மாண்டுயாடிஹூக்கு காரைக்குடி, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்திலிருந்து புதன் கிழமைதோறும் புறப்படும் ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் வாராந்திர சிறப்புக் கட்டண பண்டிகைக் காலச் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு ஜன.13, 20, 27, பிப்.3, 10, 17, 24, மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாண்டுயாடிஹ்லிருந்து புறப்படும் மாண்டுயாடிஹ் - ராமேசுவரம் சிறப்பு ரயில் ஜன.10, 17, 24, 31 பிப்.7, 14, 21, 28 மார்ச் 7 14, 21 மற்றும் 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.