கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக நாகர்கோவில் மற்றும் கோயம்பத்துருக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கோழிக்கோடு, ஷோரனுர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கும், கோழிக்கோடு, ஷோரனுர், பாலக்காடு வழியாக கோயம்பத்துருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. மங்களூர் 🔄 நாகர்கோவில் சிறப்பு ரயில் (தினசரி)

மங்களூரில் இருந்து ஜனவரி 6ம் தேதி முதல்..
மங்களூரில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், வண்டி எண் 06605 நாகர்கோவில் சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 11:20க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 7ம் தேதி முதல்..
நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 2மணிக்கு புறப்படும், வண்டி எண் 06606 மங்களூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் மாலை 6மணிக்கு மங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலில் 18 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும், ஒரு இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட குளிர்சாதன வசதி பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் அட்டவனை பின்வருமாறு ;

Train No.06605 Mangalore-
Nagercoil Daily Special Train will arrive at Parapanagadi at 11.44 hrs and leave 
at 11.45 hrs


2. கோயம்புத்தூர் 🔄 மங்களூர் சிறப்பு ரயில் (தினசரி)

கோவையில் இருந்து ஜனவரி 6ம் தேதி முதல்..
நாகர்கோவிலில் இருந்து காலை 7:55மணிக்கு புறப்படும், வண்டி எண் 06323 மங்களூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் மாலை 6:50 மணிக்கு மங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மங்களூரில் இருந்து ஜனவரி 7ம் தேதி முதல்..
மங்களூரில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும், வண்டி எண் 06324 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 7:55க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.

இந்த ரயிலில் 12 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;