கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் வழியாக டெல்லிக்கு வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவையில் இருந்து டெல்லிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

கோவையில் இருந்து ஜன 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில்..

கோவையில் இருந்து வரும் ஞாயிறு(ஜன 3) மாலை, 4:15க்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, 5ம் தேதி, மதியம், 2:15 மணிக்கு, டில்லி நிஜாமுதீன் சென்று சேரும். வரும், 31ம் தேதி வரை இந்த ரயில் இயங்கும்.

டெல்லியில் இருந்து ஜன 6, 13, 20, 27 மற்றும் பிப் 3ம் தேதிகளில்..

மறுமார்க்கமாக, ஜன., 6ம் தேதி, நிஜாமுதீனில் காலை, 7:00க்கு புறப்படும் ரயில், 8ம் தேதி மாலை, 6:30 மணிக்கு கோவை வந்து சேரும்; மறு அறிவிப்பு வரும் வரை, பிப்., 3 வரை இந்த ரயில் இயங்கும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லும் இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டி, 3 முன்று அடுக்கு ஏ.சி., பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டி என, 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;