சாதுர்யமாக செயல்பட்ட 'வைகை' அதிவேக ரயிலின் ஓட்டுனருக்கு அண்ணா விருது : குடியரசு தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார்


கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான விரைவு ரயிலை (வைகை) சுரேஷ் ஓட்டிச்சென்றார். அப்போது கொடைரோடு - அம்பாத்துரை இடையேநிலச்சரிவு ஏற்பட்டது. இதில்பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, சாதுர்யமாக செயல்பட்ட சுரேஷ், பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த விரைவு ரயில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர், இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

சென்னையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சுரேஷுக்குஅண்ணா விருதை முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார்.


இதற்கிடையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினர்.

தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ‘அண்ணா’ விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.