முழுமையான ரயில் சேவை எப்போது துவங்கும் ?

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக இந்திய ரயில்வேயின் சேவைகள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், முழுமையான ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வழக்கம் போல் ரயில் சேவையை தொடங்க இன்னும் 2 மாதங்கள் ஆகலாம் என்று இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது, அனைத்து பயணிகள் அல்லது விரைவு ரயில்களில் 65%  ரயில்களை மட்டுமே இயங்குகிறது என்றும். ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 ஆக அதிகரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

அதே வேளையில் ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்லைன் இ-டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.