1. 02608 பெங்களூர் ➡️ சென்னை பகல் நேர சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
பெங்களூரில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 12:15க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி வாலாஜா சாலை, சோலிங்குர், அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. 02607 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் பகல் நேர சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:30க்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 9:35க்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், சோலிங்குர், வாலாஜா சாலை, காட்பாடி, ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3. 02658 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இரவு நேர சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
பெங்களூரில் இருந்து இரவு 10:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:20க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
4. 02657 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இரவு நேர சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:55க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:40கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
5. 06232 மைசூர் - மயிலாடுதுறை சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், கும்பகோணம், ஆடுதுறை மற்றும் குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
6. 06231 மயிலாடுதுறை - மைசூர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிப்பு
மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:55க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு மைசூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
7. 06232 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:20க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:10 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, புகளூர், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
8. 06231 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிப்பு
தூத்துக்குடியில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:55 மணிக்கு மைசூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், புகளூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
9. 06526 பெங்களூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31 தேதி வரை நீட்டிப்பு
பெங்களூரில் இருந்து இரவு 8:20க்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், குழித்துறை மேற்கு, குழித்துறை, பள்ளியாடி, இரணியல் மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
10. 06525 கன்னியாகுமரி - பெங்களூர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிப்பு
கன்னியாகுமரியில் இருந்து காலை 10:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் நாகர்கோவில், இரணியல், பள்ளியாடி, குழித்துறை, குழித்துறை மேற்கு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
11. 06219 சாம்ராஜ்நகர் - திருப்பதி சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு
சாம்ராஜ்நகரில் இருந்து மாலை 3:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:10 மணிக்கு திருப்பதி ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் பாச்சூர், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
12. 06220 திருப்பதி - சாம்ராஜ்நகர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு
திருப்பதியில் இருந்து இரவு 9:55க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:10 மணிக்கு சாம்ராஜ் நகர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் பாச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
13. 02845 புவனேஸ்வர் - பெங்களூர் கண்டோன்மெண்ட் வாராந்திர சிறப்பு ரயில்.
வாராந்திர ரயில் : 2021, மார்ச் 28ம் தேதி வரை நீட்டிப்பு
புவனேஸ்வரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30க்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 9:50க்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வந்து சேரும். தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
14. 02846 பெங்களூர் கண்டோன்மெண்ட் - புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில்.
வாராந்திர ரயில் : 2021, மார்ச் 29ம் தேதி வரை நீட்டிப்பு
பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மாலை 4:35க்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6:10க்கு புவனேஸ்வர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
15. 06537 யஷ்வந்த்புர் - கண்ணூர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு.
பெங்களூர் யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:45க்கு கண்ணூர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
16. 06538 கண்ணூர் - யஷ்வந்த்புர் சிறப்பு ரயில்.
தினசரி ரயில் : 2021, மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு.
கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8மணிக்கு பெங்களூர் யஷ்வந்த்புர் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.