திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் வழியாக பாலக்காட்டிற்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் வழியாக பாலக்காட்டிற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 4ம் தேதி முதலும், பாலக்காட்டில் இருந்து ஜனவரி 5ம் தேதி முதலும் ரயில் சேவை துவங்கவுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து இரவு 11:15க்கு புறப்படும், 06791 திருநெல்வேலி ➡️ பாலக்காடு சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:50க்கு பாலக்காடு சென்றடையும்.

மறுமார்கத்தில், பாலக்காட்டில் இருந்து மாலை 4:05க்கு புறப்படும் ஸ் 06792 பாலக்காடு ➡️ திருநெல்வேலி சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:55க்கு நெல்லை ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், எட்டு இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் . மேலும் இந்த ரயிலில் இரண்டு சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;