அதிநவீன வசதிகளுடன் அரக்கோணம் 🔄 சேலம் சிறப்பு ரயில் சேவை துவக்கம்

அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


இந்த சிறப்பு ரயில் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் தொடர் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்த மும்முனை மின்சாரத்தில் இயங்கும் தொடர் பெட்டிகளில் உள்ள வசதிகள் என்னவென்று பார்ப்போமா ?

  • இந்த வகை ரயில்கள் முன்பு இருந்ததைவிட வேகமாகவும், குறைந்த மின்சக்தியாலும் இயக்க முடியும். 
  • இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டி யிலும் 55 பேர் அமர்ந்து கொண்டும், 171 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம். ஆனால் தற்போது முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும்.


  • இந்த ரயிலில் ரயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பெட்டியிலும் நவீன கழிப்பறை வசதி உள்ளது.
  • மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயிலில் முதல் பெட்டியில் ஏறினால் கடைசி பெட்டி வரை செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ரயிலில் ஜி பி எஸ் வசதி உள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் நிறுத்தம் குறித்த தகவல்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதியும் உள்ளது.


  • இந்த ரயிலில் பயணிக்க முதல் வகுப்பில் 585 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 115 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

புகைப்படங்கள் - தெற்கு ரயில்வே

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை 👇