வேளச்சேரி - ஆதம்பாக்கம் தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.
ஆனால், ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு நீதிமன்றம் மூலம் சமீபத்தில் தீர்வு காணப்பட்டது. இருப்பினும் இந்த தடத்தில் பணிகள் நிறைவு பெற 18 மாதங்கள் ஆகும். அதே சமயம் வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையேயான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே செய்யவுள்ளதாகவும். அதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்து துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.