மதுரையில் ரயில் பெட்டி, என்ஜின் உதிரி பாகம் பொருட்காட்சி - மதுரை கோட்ட மேலாளர் திறந்து வைத்தார்

ரயில்வேக்கு தரமான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கவும், அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையிலும், பண்டகப் பொருட்கள் காட்சி அரங்கு வழங்கவும், அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையிலும் புதிய பண்டகப் பொருட்கள் காட்சி அரங்கு ஒன்று மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் ரயில்வே துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பண்டக பொருட்காட்சி அரங்கை நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தொடங்கி வைத்தார். அப்போது கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி, கோட்ட பண்டக மேலாளர் அவ்வாரு கிரண் குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த பொருட்காட்சி அரங்கம், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.