நாகூரில் நடைபெறும் கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் 🔄 எர்ணாகுளம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக காரைக்காலிற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி காரைக்காலில் இருந்து புறப்படும் 06187 எர்ணாகுளம் சிறப்பு ரயிலில், ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரையும், எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் 06188 காரைக்கால் சிறப்பு ரயிலில் ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 28ம் வரையும், இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று இணைக்கப்படவுள்ளது.

இந்த ரயிலின் அட்டவணை 👇

06187 காரைக்கால் - எர்ணாகுளம்நிறுத்தம்06188 எர்ணாகுளம் - காரைக்கால்
16:20காரைக்கால்12:10
16.35/16.37நாகூர்10.43/10.45
16.50/16.55நாகப்பட்டினம்10.25/10.30
17.30/17.35திருவாரூர்09.45/09.50
17.59/18.00நீடாமங்கலம்09.24/09.25
18.30/18.32தஞ்சாவூர்08.53/08.55
18.49/18.50பூதலூர்08.34/08.35
19.50/20.00திருச்சி07.55/08.05
20.08/20.10திருச்சி மலைக்கோட்டை07.43/07.45
20.49/20.50குளித்தலை06.54/06.55
21.33/21.35கரூர்06.18/06.20
21.54/21.55புகலூர்05.54/05.55
23.00/23.05ஈரோடு05.00/05.05
23.44/23.45உத்துக்குளி-----
00.08/00.10திருப்பூர்03.58/04.00
01.22/01.25கோயம்புத்தூர்03.12/03.15
03.07/03.10பாலக்காடு01.37/01.40
04.05/04.06வடகஞ்சேரி------
04.32/04.35திருச்சூர்00.12/00.15
05.09/05.10இரிஞ்சாலகுட23.39/23.40
05.17/05.18சாலக்குடி23.31/23.32
05.34/05.36அங்கமலி23.17/23.18
05.45/05.47அலுவா23.06/23.08
06.04/06.05இடப்பள்ளி22.53/22.54
06.23/06.25
எர்ணாகுளம் டவுன்22.42/22.44
7:00எர்ணாகுளம் சந்திப்பு22:35

சிறப்பு ரயில்களின் அட்டவணையில் ரயில்வேத்துறையுணர் அவ்வப்போது மாற்றம் செய்து வருகின்றனர். எனவே பயணம் துவங்கும் முன்னர் ரயிலின் நேரத்தை உறுதிப்படுத்தி கொள்ளவும்.