தர்மபுரி மற்றும் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் : தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு

பெங்களூரில் இருந்து தர்மபுரி மற்றும் ஹோசுருக்கு ஜனவரி 4ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென் மேற்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது

அதன்படி பெங்களூர் யஷ்வந்த்புரில் இருந்து தர்மபுரிக்கு ஒரு ரயிலும், பெங்களூர் 🔄 ஓசூர் இடையே ஒரு ரயிலும், பெங்களூர் பைய்யப்பனஹள்ளி 🔄 ஓசூர் இடையே ஒரு ரயிலும் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1/3 - பெங்களூர் யஷ்வந்த்புர் 🔄 தர்மபுரி சிறப்பு ரயில். (ஞாயிறு தவிர)

தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும், 06278 தர்மபுரி ➡️ யஷ்வந்த்புர் சிறப்பு ரயில், அன்றைய தினம் காலை 8 மணிக்கு யஷ்வந்த்புர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:30க்கு புறப்படும், 06277 யஷ்வந்த்புர் ➡️ தர்மபுரி சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 9:35க்கு தர்மபுரி ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

2/3 - பெங்களூர் 🔄 ஓசூர் சிறப்பு ரயில். (ஞாயிறு தவிர)

பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9:25க்கு புறப்படும், 06261 பெங்களூர் ➡️ ஓசூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் பகல் 11 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில், ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும், 06262 ஓசூர் ➡️ பெங்களூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் மாலை 5:30 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

3/3 - பெங்களூர் பைய்யப்பனஹள்ளி 🔄 ஓசூர் சிறப்பு ரயில். (ஞாயிறு தவிர)

ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படும், 06260 ஓசூர் ➡️ பைய்யப்பனஹள்ளி சிறப்பு ரயில், அன்றைய தினம் பகல் 1:15 மணிக்கு பைய்யப்பனஹள்ளி ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், பைய்யப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:30க்கு புறப்படும், 06259 பைய்யப்பனஹள்ளி ➡️ ஓசூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் பிற்பகல் 2:45க்கு தர்மபுரி ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;