நாடு முழுவதும் தனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம் : தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டம் !டெல்லி - லக்னோ, அகமாதாபாத் - மும்பை இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த இரண்டு ரயில்களும் லாபகரமாக ஓடுவதால் கூடுதல் தடங்களில் தனியார் ரயில்களை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே தீர்மானித்துள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு 6 ஜோடி ரயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு 4 ஜோடி ரயில்களும், தமிழகத்தில் 6 ஜோடி ரயில்களும் இயக்க திட்டம்.


அதன்படி நாடு முழுவதும் 152 வழிதடங்களில் தனியார் ரயில்கள் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக 12 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மையத்தில் 14 ஜோடி தனியார் ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில் 13 ஜோடி ரயில்கள் தமிழகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஹௌரா மையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு ரயிலும், செக்கந்தராபாத் மையத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு இரண்டு ரயில்களும் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் அட்டவணை பின்வருமாறு ;

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள்.

1. ஹௌரா 🔄 சென்னை (தினசரி).

சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு ஹௌரா சென்றடையும். மறுமார்கத்தில் ஹௌராவில் இருந்து மாலை 3:50க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5:30க்கு சென்னை வந்து சேரும். விஜயவாடா, புவனேஸ்வர் வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 4 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

2. சென்னை 🔄 மும்பை லோகமணிய திலக் முனையம் (வாரத்தில் இரு நாட்கள்).

சென்னையில் இருந்து வியாழன் மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5:15க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2:25க்கு மும்பை சென்றடையும். மறுமார்கத்தில் மும்பையில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:05க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 3:30க்கு சென்னை வந்து சேரும். ரெனிகுண்ட, ராய்ச்சூர், வாடி, புனே வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 7 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

3. சென்னை 🔄 மங்களூர் (வாராந்திர சேவை).

சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7:10க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்கத்தில் மங்களூரில் இருந்து புதன்கிழமை மாலை 5:05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30க்கு சென்னை வந்து சேரும். சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 8 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

4. சென்னை 🔄 திருப்பதி (வாராந்திர சேவை).

சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு 7:20க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு திருப்பதி சென்றடையும். மறுமார்கத்தில் திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9:40க்கு புறப்பட்டு அன்றைய தினம் பகல் 12:50க்கு சென்னை வந்து சேரும். அரக்கோணம் வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 2 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

5. கன்னியாகுமரி 🔄 எர்ணாகுளம் (தினசரி).

கன்னியாகுமரியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:30க்கு கன்னியாகுமரி வந்து சேரும். நாகர்கோவில், கொல்லம், கோட்டயம் வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 4 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

6. சென்னை 🔄 டெல்லி நிஜாமுதின் (தினசரி).

சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து மாலை 3:45க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8 மணிக்கு சென்னை வந்து சேரும். விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 8 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள்.

1. கொச்சுவெளி 🔄 லும்டிங் (வாரத்தில் மூன்று நாட்கள்).

கேரளா மாநிலம் கொச்சுவெளியில் இருந்து வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பகல் 1:30க்கு புறப்பட்டு இரண்டாம் நாள் காலை 6மணிக்கு லும்டிங் சென்றடையும். மறுமார்கத்தில் லும்டிங்கில் இருந்து ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 8:30க்கு புறப்பட்டு இரண்டாம் நாள் மாலை 3:10க்கு கொச்சுவெளி வந்து சேரும். எர்ணாகுளம், ஈரோடு, ரெனிகுண்ட, விஜயவாடா வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 18 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிப்பட்டுள்ளது.

2. பெங்களூரு 🔄 விசாகப்பட்டினம் (வாரத்தில் இரண்டு நாட்கள்).

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12:30க்கு பெங்களூரு பைபணஹள்ளி புதிய முனையம் வந்து சேரும். மறுமார்கத்தில் பெங்களூரு பைபணஹள்ளி புதிய முனையத்தில் இருந்து செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12:25க்கு விசாகப்பட்டினம் சென்றடையும். விஜயவாடா, கூடுர், ரெனிகுண்ட, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 5 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. பெங்களூர் 🔄 சம்பல்பூர் (வாராந்திர சேவை).

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 10:50க்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12:30க்கு பெங்களூரு பைபணஹள்ளி புதிய முனையம் வந்து சேரும். மறுமார்கத்தில் பெங்களூரு பைபணஹள்ளி புதிய முனையத்தில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:30க்கு சம்பல்பூர் சென்றடையும். விஜயவாடா, கூடுர், ரெனிகுண்ட, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 12 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. புதுச்சேரி 🔄 கச்சேகுட (தினசரி).

புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:10க்கு கச்சேகுட சென்றடையும். மறுமார்கத்தில், கச்சேகுடவில் இருந்து இரவு 7:30க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12:40க்கு புதுச்சேரி வந்து சேரும். சென்னை எழும்பூர், கூடுர், குண்டூர் வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 8 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குள் இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள்.

1. மதுரை 🔄 தாம்பரம் (தினசரி).

மதுரையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 12:20க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10:15க்கு மதுரை வந்து சேரும். விழுப்புரம், திண்டுக்கல் வழியாக செல்லும் இந்த ரயில் இடையில் 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. கோயம்புத்தூர் 🔄 சென்னை (தினசரி).

கோயம்புத்தூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் காலை 11:45க்கு சென்னை சென்றடையும். மறுமார்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:45க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். சேலம், ஈரோடு வழியாக செல்லும் இந்த ரயில் இடையில் 4 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. திருநெல்வேலி 🔄 தாம்பரம் (தினசரி).

திருநெல்வேலியில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:30க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை 5:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லும் இந்த ரயில் இடையில் 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. திருநெல்வேலி 🔄 கோயம்புத்தூர் (தினசரி).

திருநெல்வேலியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 12:20க்கு கோயம்புத்தூர் சென்றடையும். மறுமார்கத்தில் கோயம்புத்தூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 9:30க்கு திருநெல்வேலி வந்து சேரும். மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு வழியாக செல்லும் இந்த ரயில், இடையில் 8 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

5. திருச்சி 🔄 தாம்பரம் (தினசரி).

திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் காலை 10:20க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 9:30க்கு திருச்சி வந்து சேரும். விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் இந்த ரயில் இடையில் 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6. கன்னியாகுமரி 🔄 தாம்பரம் (தினசரி).

கன்னியாகுமரியில் இருந்து இரவு 9:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:20க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை 4:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:30க்கு கன்னியாகுமரி வந்து சேரும். விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக செல்லும் இந்த ரயில் இடையில் 8 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர் வரும் 2021ம் ஆண்டு நிதி நிலை அறிக்கைகளில் தனியார் ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.