இந்தியாவின் இரும்பு மனிதரான சா்தாா் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சா்தாா் சரோவா் அணை அருகே 182 மீட்டா் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை தான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஒற்றுமையின் சிலை.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அப்போதைய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வல்லபாய் படேல் சிறு சிறு பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் மிக முக்கியமானவராக திகழ்கிறாா். அவரது பணியை போற்றும் வகையில் இச்சிலைக்கு “ஒற்றுமையின் சிலை” (Statue of Unity) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- 12927/28 தாதர் கேவடியா அதிவிரைவு
- 20903/04 கேவடியா வாரணாசி
- 20905/06 கேவடியா ரேவா
- 20919/20 கேவடியா சென்னை
- 20947/48 கேவடியா ஆமதாபாத் ஜனசதாப்தி
- 20945/46 கேவடியா நிஜாமுதீன்
- 69201/02 கேவடியா பிரதாப்நகர் மின்தொடர் ரயில்
- 69203/04 கேவடியா வடோதரா மின்தொடர் ரயில்
மேற்கொண்ட 8 ஜோடி ரயில்களை தவிர்த்து இன்னும் கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக ரயில் அட்டவணை(ஜனவரி 17ம் தேதி சேவை மட்டும்)
சென்னையில் இருந்து ஜனவரி 17ம் தேதி காலை 11:12க்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6:10க்கு கேவடியா ரயில் நிலையம் சென்றடையும். இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
இந்த ரயில் ரேனிகுண்ட, கடப்பா, குண்டக்கல், ராய்ச்சூர், சோலாப்பூர், புனே, கல்யாண், வசாய் ரோடு, சூரத் மற்றும் வடோதரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
20919/20920 கேவடியா 🔄 சென்னை வாராந்திர சேவை
தற்போது நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சென்னை 🔄 கேவடியா இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள 20919/20920 வாராந்திர ரயில் சேவை சிறப்பு ரயிலாக இயங்கவுள்ளது. அதன்படி ஜனவரி 20ம் தேதி முதல் இயங்கவுள்ள சிறப்பு ரயில் அட்டவணை பின்வருமாறு ;
வண்டி எண் 09120 கேவடியா ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், வாரத்தில் புதன்கிழமைகளில் காலை 9:15க்கு புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு சென்னைக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
மறுமார்கத்தில் வண்டி எண் 09119 சென்னை சென்ட்ரல் ➡️ கேவடியா சிறப்பு ரயில், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10:30க்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு கேவடியா ரயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரயில் வடோதரா, சூரத், வசை ரோடு, கல்யாண், புனே, சோலாப்பூர், ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரெனிகுண்ட ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை நோக்கி பயணிக்கும் போது கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.