சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம்

தமிழகத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி தளர்வுகளில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சென்னை மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்க ஞாயிறுகிழமை மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் 50 சதவீத கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து தற்போது 90 சென்றி மீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.