7 ஜோடி சிறப்பு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் ஒரு சில விரைவு ரயில் சேவைகளை தவிர பெரும்பான்மையான ரயில்கள் சிறப்பு ரயில்கலாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு ரயில்களின் அட்டவணையில் அவ்வப்போது சில மாற்றங்களை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் நிரந்தர அடிப்படையில் 7 ஜோடி சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. 06063/06064 சென்னை எழும்பூர் 🔄 நாகர்கோவில் சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் சென்னையில் இருந்து ஜனவரி 14ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 15ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், ஆறு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

2. 06067/06068 சென்னை எழும்பூர் 🔄 ஜோத்பூர் சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் சென்னையில் இருந்து ஜனவரி 16ம் தேதி முதலும், ஜோத்பூரில் இருந்து ஜனவரி 18ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், ஆறு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

3. 02611/02612 சென்னை சென்ட்ரல் 🔄 நியூ ஜல்பைகுறி சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் சென்னையில் இருந்து ஜனவரி 20ம் தேதி முதலும், நியூ ஜல்பைகுறியில் இருந்து ஜனவரி 22ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், நான்கு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

4. 06077/06078 கோயம்புத்தூர் 🔄 டெல்லி நிஜாமுதின் சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் கோவையில் இருந்து ஜனவரி 17ம் தேதி முதலும், டெல்லி நிஜாமுதினில் இருந்து ஜனவரி 20ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், நான்கு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 3 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

5. 06733/06734 ராமேஸ்வரம் 🔄 ஓகா சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 15ம் தேதி முதலும், ஓகாவில் இருந்து ஜனவரி 19ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், ஓர் இரண்டாம் வகுப்பு பொது வகுப்பு பெட்டியும் இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், 3 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த ரயிலில் ஒரு முதல் வகுப்புடன் கூடிய இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.

6. எர்ணாகுளம் 🔄 பாட்னா சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 18ம் தேதி முதலும், பாட்னாவில் இருந்து ஜனவரி 21ம் தேதி முதலும் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டியும், நான்கு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகளும், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த ரயிலில் உணவு தயாரித்து விநியோகிக்கும் வசதி கொண்ட பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.

7. 06729/06730 மதுரை 🔄 புணலூர் சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயிலில் மதுரையில் இருந்து ஜனவரி 15ம் தேதி முதலும், புணலூரில் இருந்து ஜனவரி 16ம் தேதி முதலும் ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரயிலில் ஒரு மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டியும், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 8 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.