இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தில், சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கு மக்களை அழைத்து செல்கிறது.
இந்நிலையில், வருகின்ற பிப்ரவரி 6ம் தேதி திருநெல்வேலியில் இருந்து பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், பெங்களூர் வைட்பீல்ட், சென்னை பெரம்பூர், விஜயவாடா வழியாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாத் கோவில் மற்றும் கோணர்க் சூரிய கோவிலுக்கு அழைத்து செல்கிறது.
மேலும், கொல்கத்தாவில் அமைந்துள்ள காளி மாதா, பெலூர் மத் மற்றும் விக்டோரியா மெமோரியல், கயா, அலகாபாத், வாரணாசி ஆகிய இடங்களை இந்த ரயில் மூலம் சுற்றி பார்க்கலாம்
இந்த சுற்றுலா யாத்திரைக்கு, நபர் ஒருவருக்கு 9 ஆயிரத்து, 465 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 044 25352987, 9003140681, 0452-2345757, 8287931977, 8287931965 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
Destination covered : Puri - Konark - Kolkata - Gaya - Varanasi - Allahabad
Boarding Points: Tirunelveli, Madurai, Dindigul, Karur, Erode, Salem, Whitefield, Perambur, Vijayawada
Deboarding Points: Vijayawada, Perambur, Whitefield, Salem, Erode, Karur, Dindigul, Madurai, Tirunelveli
Package Details |
Package Name | "PUNYA TEERTH YATRA (Thai Amavasya Special)" (SZBD380A) |
Destination Covered | Puri - Konark - Kolkata - Gaya - Varanasi - Allahabad |
Traveling Mode | Train |
Station/Departure Time | Tirunelveli - 00:05 Hrs |
Class | Budget |
Frequency | 06.02.2021 |
Package Tariff:(Inclusive of GST)
Category | Price Per Pax (5 years & above) |
Budget | ₹ 9,465/- |