சென்னையில் இருந்து காட்பாடி, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த சதாப்தி ரயில்களில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு ஜனவரி 4ம் தேதி முதல், வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும், 06081 சென்னை சென்ட்ரல் ➡️ மைசூர் சதாப்தி சிறப்பு ரயில், அன்றைய தினம் பகல் 1 மணிக்கு மைசூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், மைசூரில் இருந்து பிற்பகல் 2:15க்கு புறப்படும், 06082 மைசூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இரவு 9:15க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயிலில் இரண்டு முதல் வகுப்புடன் கூடிய உயர் தர ரக பெட்டிகளும், 12 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ராயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;