அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, மொரப்பூர் வழியாக சேலத்திற்கு சிறப்பு மேமு விரைவு ரயில் : வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

அரக்கோணம் 🔄 சேலம் இடையே மேமு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி 6ம் தேதி முதல் இந்த ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயில் சனி மட்டும் ஞாயிற்றுக்கிழமை தவிர இதர 5 நாட்கள் மட்டுமே இயங்கும்.

இந்த ரயில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இயங்கும்.

வண்டி எண் 06087 அரக்கோணம் ➡️ சேலம் விரைவு சிறப்பு ரயில், அரக்கோணத்தில் இருந்து காலை 5:15க்கு புறப்பட்டு, காலை 10:50க்கு சேலம் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில், வண்டி எண் 06088 சேலம் ➡️ அரக்கோணம் விரைவு சிறப்பு ரயில், சேலத்தில் இருந்து பிற்பகல் 3:30க்கு புறப்பட்டு, இரவு 9:10க்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்து சேரும்.


இந்த ரயில் சோலிங்குர், வாலாஜா சாலை, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, தோட்டம்பட்டி, மொரப்பூர், புத்திரெட்டிப்பட்டி, பொம்மிடி, திண்ணப்பட்டி மற்றும் கருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவ நாளை(ஜன 6) காலை 8மணிக்கு துவங்கும்.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை 👇