தமிழகத்தில் 3 வழிதடங்களை மின்சார பாதையாக மாற்றியமைக்கும் தேதி அறிவிப்பு : இந்த தடத்தில் கடவுப் பாதையை கடக்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் அனைத்து ரயில் பாதைகளையும் மின்சார ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை ரயில்வே துறை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் போத்தனுர் ➡️ திண்டுக்கல், திருச்செந்தூர் ➡️ திருநெல்வேலி ➡️ செங்கோட்டை மற்றும் தென்காசி ➡️ விருதுநகர் ஆகிய 3 வழிதடங்களை மின்சார ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும் இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ; 


வழித்தடம்தேதி
பொள்ளாச்சி ➡️ போத்தனுர்10.02.2021
பொள்ளாச்சி ➡️ பழனி10.06.2021
பழனி ➡️ திண்டுக்கல்10.09.2021
பொள்ளாச்சி ➡️ பாலக்காடு டவுன்10.09.2021
திருச்செந்தூர் ➡️ திருநெல்வேலி ➡️ அம்பாசமுத்திரம்10.12.2021
அம்பாசமுத்திரம் ➡️ செங்கோட்டை10.03.2022
விருதுநகர் ➡️ ராஜபாளையம் ➡️ தென்காசி10.06.2022

மேற்கொண்ட வழிதடங்த்திற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள தேதி முதல் 25 கிலோவாட் மின்சார ரயில் பாதை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அது சமயம் இந்த தடத்தில் உள்ள கடவுப் பாதைகளை கடக்கும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் உயரம் குறித்த குறியீடு குறிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இந்த குறியீட்டை மீறி செல்ல ரயில்வே துறை அனுமதிக்காது.

மாதிரி புகைப்படம் - ரயில் பாதையை கடக்க அனுமதிக்கப்பட்டுள்ள உயரத்தை காட்டும் குறியீடு


கூடுதல் உயரத்தில் சுமைகளை ஏற்றி செல்வதால், ஏற்படும் தீமைகள் ;

  • சாலை மற்றும் ரயில் பாதையில் தடை ஏற்பட வாய்ப்பு.
  • வாகனத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம். மேலும் வாகனத்தில் ஏற்றி செல்லும் பொருட்களுக்கும் ஆபத்து.
  • தீப்பிடிக்க வாய்ப்புள்ளது, இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே தற்போது இருந்தே குறிப்பிடப்பட்டுள்ள உயரத்திற்கு உண்டான பொருடகளையே அல்லது வாகனங்களை மட்டுமே உபயோகிக்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.