சென்னை எழும்பூர் ➡️ குருவாயூர் சிறப்பு ரயிலின் அட்டவணையில் இன்று(ஜன 3) முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக குருவாயுருக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் ஆகிய ரயில் நிலையங்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

06127 சென்னை எழும்பூர் ➡️ குருவாயூர் சிறப்பு ரயில்.
ஜனவரி 3ம் தேதி முதல்..

சென்னை எழும்பூர் - 8:40 காலை
தாம்பரம் 9:08/09:10
செங்கல்பட்டு 9:38/9:40
மேல்மருவத்தூர் 10:08/10:10
திண்டிவனம் 10:33/10:35