2020 டிசம்பரில் அதிகளவிலான சரக்குகளை இந்திய ரயில்வே கையாண்டது


2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சரக்கு கையாள்வதின் வருவாய் மற்றும் அளவில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சரக்குப் போக்குவரத்தின் மூலமாக 2020 டிசம்பர் மாதம் ரூபாய் 11788.11 கோடியை ரயில்வே ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ 11030.37 கோடியை விட 6.87 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டின் இதே காலத்தை விட கூடுதலான சரக்கின் அளவு, வருவாய் மற்றும் போக்குவரத்தை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.

2020 டிசம்பரில் இந்திய ரயில்வே 118.13 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 8.54 சதவீதம் (108.84 மில்லியன் டன்) அதிகமாகும்.

புகைப்படம் - ரயில்வே அமைச்சகம்

சரக்குப் போக்குவரத்தின் மூலமாக 2020 டிசம்பர் மாதம் ரூபாய் 11788.11 கோடியை ரயில்வே ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ 11030.37 கோடியை விட 6.87 சதவீதம் அதிகமாகும்.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக கொவிட்-19-ஐ இந்திய ரயில்வே பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.