மின்சார இன்ஜின் மூலம் இயங்கும் உலகின் முதல் 1.5 கிலோமீட்டர் நீள பெட்டக ரயிலை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இரட்டை அடுக்கு பெட்டக ரயிலை இயக்குவதன் மூலம் கூடுதலாக 25 டன் சுமையைக் கொண்டு செல்ல முடியும். இதனை டிஎப்சிசிஐஎல்-லுக்காக ஆர்டிஎஸ்ஓ-வின் ரயில் பெட்டி துறை வடிவமைத்தது.

இந்த இரட்டை அடுக்கு பெட்டக ரயில், தற்போதைய இந்திய ரயில்வே போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு எண்ணிக்கையில் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது.

டிஎப்சிசிஐஎல் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில்களை இயக்கும். தற்போது இந்திய ரயில்வே பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 75 கி.மீ வேகத்திலேயே சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.