சென்னை மெட்ரோ : வண்ணாரப்பேட்டை 🔄 விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ தடத்தில் வருகின்ற 15ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

வண்ணாரப்பேட்டை 🔄 திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 3,770 கோடி ரூபாய் செலவில், 9.051 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதையில் சமீபத்தில் மெட்ரோ அதிகாரிகளால் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வருகின்ற 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்தத் தடத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இதனை தொடர்ந்து மெட்ரோ நிலையங்களில், பயணியர் பயன்பாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் அனைத்தும் துரிதமாக முடிக்க ஒப்பந்ததர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆய்விற்கு பின்னர் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மாத இறுதியில் வண்ணாரப்பேட்டை 🔄 திருவொற்றியூர் விம்கோ நகர் தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Metro Phase 1 Map