தேசிய மின்சார சிக்கனம் விருதுகள் வழங்கும் விழாவில் மூன்று மதிப்புமிக்க பிரிவுகளில் 13 விருதுகளை இந்திய ரயில்வே வென்றுள்ளது.

மின்சார சிக்கனத்துக்கான அலுவலகம் மற்றும் மத்திய மின்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய மின்சார சிக்கனம் விருதுகள் வழங்கும் விழாவில் மூன்று மதிப்புமிக்க பிரிவுகளில் 13 விருதுகளை இந்திய ரயில்வே வென்றுள்ளது.

தூய்மையான மற்றும் பசுமை போக்குவரத்தை தனது அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பயணிகளுக்கு வழங்குவதற்கான இந்திய ரயில்வேயின் தொய்வில்லாத மற்றும் தொடர் முயற்சிகளின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், கிழக்கு ரயில்வேக்கு இரண்டாவது பரிசும், வடகிழக்கு மற்றும் தெற்கு மத்திய ரயில்வேக்கு சிறப்பாக செயல்பட்டதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

ரயில்வே பணிமனை துணைப்பிரிவில் விஜயவாடாவில் உள்ள தெற்கு மத்திய ரயில்வே டீசல் லோகோ பணிமனை முதல் பரிசையும், கஞ்ச்ரபாரா பணிமனை, தெற்கு ரயில்வே, வடக்கு 24 பர்கானாஸ் இரண்டாம் பரிசையும் வென்றுள்ளன.

இசாட் நகரிலுள்ள வடகிழக்கு ரயில்வேயில் பணிமனை, மைசூரில் உள்ள மத்திய ரயி்ல்வே பணிமனை, வடகிழக்கு முன்கள ரயில்வேயின் திப்ருகர் பணிமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலை மத்திய பணிமனை ஆகியவற்றுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.