ஜனவரி 10ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கம் - முன்பதிவு நடைபெறுகிறது


பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சென்னை எழும்பூர் 🔄 மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;


சென்னை எழும்பூர் 🔄 மதுரை 'தேஜஸ்' அதிவிரைவு சொகுசு வண்டி.

"ஜனவரி 10ம் தேதி முதல் இருமார்க்கத்திலும்"

அட்டவணை விவரம் 👇 
02613 மதுரை தேஜஸ் சிறப்பு02614 சென்னை எழும்பூர் தேஜஸ் சிறப்பு
6:00எழும்பூர்21.15
9:55/10.00திருச்சி17.00/17.05
11.18/11.20கொடைக்கானல் ரோடு15.28/15.30
12:15மதுரை15.00
வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவை கிடையாது.

கட்டணம்

இந்த ரயிலில் அமரும் வசதி கொண்ட குளிர்சாதன வகுப்பில் பயணிக்க ₹920ம், உயர் தர குளிர்சாதன வகுப்பில் பயணம் செய்ய ₹1965ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்து அதனை ரத்து செய்யாத பயணிகள் அந்த பயணசீட்டை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.