IRCTCயின் புதிய வலைத்தளம் அறிமுகம் : மேம்பட்ட வசதிகள் மற்றும் எளிய வடிவமைப்போடு IRCTC


நேரலை

புதிய தளத்தில் நிமிடத்திற்கு 10000 பயணசீட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். முன்னர் இது நிமிடத்திற்கு 7500 ஆக இருந்தது.

ரயிலில் பயணிப்பவர்களுக்கு மிகப் பெரிய நல்ல செய்தி இது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது இனிமேல் எளிதாகிவிடும். IRCTCயின் வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முன்பை விட துரிதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்பதோடு, பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனை ரயில்வே அமைச்சர் இன்று துவக்கி வைக்கவுள்ளார். IRCTCயின் இ-டிக்கெட் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டும் புத்தம் புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது பயணிகளுக்கு ஆன்லைனில் சுலபமாக டிக்கெட் முன்பதிவு செய்ய உதவும். புதிய வலைத்தளம் டிக்கெட் முன்பதிவை மிகவும் எளிதாக்குகிறது. பல மாற்றங்களுடன் முன்பதிவு மிகத் துரிதமாக நடைபெறும்.

இதன் மூலம் பயணிகள் முன்பை விடவும், எந்த இடையூறும் இல்லாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் கூறுகிறது. 

அதே சமயம் irctc வலைதளத்தில் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருகும். இதன் மூலம் ஐ.ஆர்.சி.டி.சியின் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.