காரைக்கால் 🔄 எர்ணாகுளம் சிறப்பு ரயிலில் தற்காலிகமாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைப்பு - தெற்கு ரயில்வே

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக காரைக்காலிற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி காரைக்காலில் இருந்து புறப்படும் 06187 எர்ணாகுளம் சிறப்பு ரயிலில், ஜனவரி 2ம் தேதி வரையும், எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் 06188 காரைக்கால் சிறப்பு ரயிலில் ஜனவரி 3ம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.