‘தற்சார்பு இந்தியாவை உருவாக்குதல்': ரயில்வே அமைச்சகத்தின் ஆண்டு நிறைவு சாதனைகளை எடுத்துரைக்கும் கையேடு வெளியிடப்பட்டது


ரயில்வே அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் அடங்கிய ‘தற்சார்பு இந்தியாவை உருவாக்குதல்' என்ற தலைப்பிலான கையேட்டை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் இந்திய ரயில்வே மேற்கொண்ட முன்முயற்சிகளும் சாதனைகளும் இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன.‌

கோவிட்-19 காலத்தில் ரயில்வே நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்ந்தது, கோவிட்-19 இன் போது ரயில்வே மேற்கொண்ட நல்லெண்ணெ நடவடிக்கைகள், ரயில் பாதுகாப்பு, சிறப்பான எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பு, தற்சார்பு இந்தியா, தூய்மையான ரயில் தூய்மையான இந்தியா, பசுமை ரயில்வே, பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் சேவை, விவசாயிகள் ரயிலுடன் செழிப்பான விளைநிலங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் ரயில்வே அமைச்சகத்தின் குறிப்பிடும்படியான சாதனைகளும் நடவடிக்கைகளும் இந்த கையேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

கிழே உள்ள இணைப்பில் ஆங்கில கையேட்டை காணலாம்:

https://indianrailways.gov.in/English%20Achievement%20Booklet%20RAILWAY__25.12.20.pdf