கவுகாத்தி 🔄 பெங்களூர் கண்டோன்மெண்ட் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில் : பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.

பெங்களூர் கண்டோன்மெண்ட் 🔄 கவுகாத்தி இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

வண்டி எண் 02510 கவுகாத்தி ➡️ பெங்களூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில், ஞாயுறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 6:20க்கு கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 10:50க்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 02509 பெங்களூர் கண்டோன்மெண்ட் ➡️ கவுகாத்தி சிறப்பு ரயில், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:40க்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நான்காவது நாள் காலை 5:35க்கு கவுகாத்தி சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.