சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் இடையே விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக தினசரி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் இடையே மெயின் லைன் வழியாக தினசரி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சென்னையில் இருந்து டிசம்பர் 8ம் தேதி முதலும், ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 9ம் தேதி முதலும் சிறப்பு ரயில் சேவை


வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் ➡️ ராமேஸ்வரம் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 7:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 06852 ராமேஸ்வரம் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5:10க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் மற்றும் பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும.

ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் போது கடலூர் துறைமுகம் மற்றும் சீர்காழி ரயில் நிலையங்களிலும், சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது மாம்பலம் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.