அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 8ம் தேதி முதலும், குருவாயூரில் இருந்து டிசம்பர் 9ம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளது.
வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் ➡️ குருவாயூர் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து காலை 8:25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:40க்கு குருவாயூர் சென்றடையும்.
மறுமார்கத்தில் வண்டி எண் 06128 குருவாயூர் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், குருவாயூரில் இருந்து இரவு 9:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:35க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
தமிழகத்தில் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
குருவாயூர் மார்க்கமாக பயணிக்கும் போது மதுரை அருகில் உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்திலும், சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது மாம்பலம் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.