சென்னை சென்ட்ரல் 🔄 பாலக்காடு இடையே சேலம், நாமக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் 🔄 பாலக்காடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 8ம் தேதியில் இருந்தும், பாலக்காட்டில் இருந்து டிசம்பர் 9ம் தேதியில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9:40க்கு புறப்படும், 02651 பாலக்காடு சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:10க்கு பாலக்காடு சென்றடையும்.

மறுமார்கத்தில் பாலக்காட்டில் இருந்து மாலை 3:35க்கு புறப்படும் 02652 சிறப்பு ரயில், மறுநாள் காலை 04:05க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

இருமார்கத்திலும் நின்று செல்லும் இடங்கள்.

தமிழகத்தில் இந்த ரயில் திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், மோகனுர், கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும.

ஒரு மார்க்கத்தில் மட்டும் நிற்கும் இடங்கள்.

பாலக்காடு மார்க்கமாக செல்லும் போது குடியாத்தம் ரயில் நிலையத்திலும், சென்னை மார்க்கமாக செல்லும் போது ராசிபுரம், மொரப்பூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு..

⇣⇣ 02651 ⇡⇡ 02652
09:40 PMசென்னை சென்ட்ரல்04:05 AM
--பெரம்பூர்03:28/03:30
22:18/22:20திருவள்ளூர்02:53/02:55
22:43/22:45அரக்கோணம்02:28/02:30
23:38/23:40காட்பாடி01:38/01:40
00:03/00:05குடியாத்தம்--
00:53/00:55ஜோலார்பேட்டை00:28/00:30
--மொரப்பூர்23:28/23:30
02:35/02:40சேலம்22:35/22:40
--ராசிபுரம்22:04/22:05
03:39/03:40நாமக்கல்21:41/21:42
03:59/04:00மோகனுர்21:24/21:25
04:23/04:25கரூர்21:03/21:05
06:05/06:15திண்டுக்கல்19:40/19:50
06:43/06:45ஓட்டன்ச்சத்திரம்18:23/18:25
07:20/07:25பழனி17:55/18:00
08:03/08:05உடுமலைப்பேட்டை17:08/17:10
08:47/08:50பொள்ளாச்சி16:37/16:40
09:38/09:40பாலக்காடு டவுன் 15:45/15:47
10:10 AMபாலக்காடு03:35 PM