கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சிறப்பு ரயில்.

சாம்ராஜ் நகர் 🔄 திருப்பதி இடையே ஜோலார்பேட்டை ஸ் காட்பாடி வழியாக தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சாம்ராஜ் நகரில் இருந்து டிசம்பர் 7ம் தேதி முதல்.. திருப்பதியில் இருந்து டிசம்பர் 8ம் தேதி முதல்..

06219 சாம்ராஜ் நகர் ➡️ திருப்பதி சிறப்பு ரயில், டிசம்பர் 7ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இயங்கும்.

சாம்ராஜ் நகர் 3:10 மாலை
பெங்களூர் 8:20/8:45 இரவு
ஜோலார்பேட்டை 00:01/00:05 நள்ளிரவு
காட்பாடி 2:40/2:45
திருப்பதி 5:25 காலை

06220 திருப்பதி ➡️ சாம்ராஜ் நகர் சிறப்பு ரயில், டிசம்பர் 8ம் தேதி முதல் 2021 ஜனவரி 1ம் தேதி வரை இயங்கும்.

திருப்பதி 9:35 இரவு
காட்பாடி 00:05/00:10 நள்ளிரவு
ஜோலார்பேட்டை 02:08/02:10
பெங்களூர் 06:55/7:20 காலை
மைசூர் 10:30/10:40 காலை
சாம்ராஜ் நகர் 12:30 பகல்

தமிழகத்தில் இந்த ரயில் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தென்மேற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

இந்த ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றும், இரண்டு அடுக்கு குளிர்சாதன வகுப்பு பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதன வகுப்பு பெட்டி இரண்டும், எட்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.