மதுரை 🔄 புணலூர் இடையே விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் வழியாக சிறப்பு விரைவு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை 🔄 புணலூர் இடையே விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 4ம் தேதி முதல் மதுரையில் இருந்தும், டிசம்பர் 5ம் தேதி முதல் புணலூரில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளது.

மதுரையில் இருந்து டிசம்பர் 4ம் தேதி முதலும், புணலூரில் இருந்து டிசம்பர் 5ம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.


மதுரையில் இருந்து இரவு 11:30க்கு புறப்படும் 06729 புணலூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:20க்கு கேரளா மாநிலம் புணலூருக்கு சென்றடையும்.

மறுமார்கத்தில் மாலை 5:20க்கு புறப்படும் 06730 மதுரை சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:20க்கு மதுரை வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை 🔄 புணலூர் இடையே பயணிகள் ரயில் ஆக இயங்கி வந்த ரயில் தற்போது விரைவு ரயில் ஆக இயக்கப்படவுள்ளது.