திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, மங்களூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருநெல்வேலி 🔄 மும்பை தாதர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி நெல்லையில் இருந்து டிசம்பர் 16, 23 மற்றும் 30ம் தேதிகளிலும், மும்பை தாதரில் இருந்து டிசம்பர் 17, 24 மற்றும் 31ம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.


திருநெல்வேலியில் இருந்து காலை 7:15க்கு புறப்படும் 06072 மும்பை தாதர் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3மணிக்கு தாதர் சென்றடையும்.

மறுமார்கத்தில் தாதரில் இருந்து இரவு 8:40மணிக்கு புறப்படும், 06071 திருநெல்வேலி சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 4மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.06072 TEN-DR SplStationsT.No.06071 DR-TEN  Spl
07.15Tirunelveli04.00
08.10/08.12Kovilpatti----
08.58/09.00Virudhunagar01.51/01.53
09.45/09.50Madurai00.55/01.00
11.00/11.05Dindugal23.52/23.55
12.18/12.20Karur22.33/22.35
13.20/13.25Erode21.20/21.25
14.08/14.10Tiruppur20.23/20.25
15.07/15.10Coimbatore19.37/19.40
16.07/16.10Palghat17.37/17.40
17.02/17.05Shoranur16.40/16.45
18.22/18.25Kozhikode15.17/15.20
19.47/19.50Kannur13.57/14.00
21.50/22.00Mangalore Jn12.00/12.10
23.36/23.38Udupi10.40/10.42
01.18/01.20Honnavar09.00/09.02
02.18/02.20Karwar07.20/07.22
03.50/04.00Madgaon06.15/06.25
04.44/04.46Thivim04.58/05.00
06.04/06.06Kankavali03.58/04.00
08.15/08.20Ratnagiri02.20/02.25
09.20/09.22Chiplun01.02/01.04
13.20/13.25Panvel21.55/22.00
14.27/14.30Thane21.04/21.07
15.00Dadar20.40