ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

இருமுடி மற்றும் தை பூச விழாவை முன்னிட்டு பல்வேறு ரயில்களுக்கு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டு இருந்தது.


இதில் ராமேஸ்வரம் 🔄 வாரணாசி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலுக்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த தற்காலிக நிறுத்தத்தை மேலும் ஒரு மாதம் அதாவது ஜனவரி மாதத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் அட்டவணை விவரம் பின்வருமாறு ;

வாரணாசி ➡️ ராமேஸ்வரம்

ரயில் எண்

ரயிலின் பெயர்

மேல்மருவத்தூர்

வருகை/புறப்பாடு

ரயில் பயணம் துவங்கும் தேதி

05120

ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

09.33/09.35

ஜனவரி 3, 10 17 மற்றும் 24ம் தேதி

 

ராமேஸ்வரம் ➡️ வாரணாசி

ரயில் எண்

ரயிலின் பெயர்

மேல்மருவத்தூர்

வருகை/புறப்பாடு

ரயில் பயணம் துவங்கும் தேதி

05119

வாரணாசி சிறப்பு ரயில்

11.18/11.20

ஜனவரி 6, 13, 20 மற்றும் 27ம் தேதி