கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க எதுவாக போத்தனுர் ரயில் நிலையத்தை மேம்படுத்த பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கோரிக்கை

போத்தனுர் ரயில் நிலையத்தை மாடல் ரயில் நிலையமாக மாற்ற பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 157 ஆண்டுகள் பழமையான போத்தனுர் ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிக்கும் வசதிகள் மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வருகின்ற 22ம் தேதி பொள்ளாச்சி மற்றும் கிணத்துகடவு ரயில் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் போது போத்தனுர் - பொள்ளாச்சி தடத்தில் நடைபெறும் மின்மயமாக்கல் பணி மற்றும் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அவர் பார்வையிட உள்ளார்.