வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே இன்று முதல் டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் : ஜனவரியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மற்றும் பரங்கிமலை முதல் சென்னை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்டிப்பு திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே 3770 கோடி ரூபாய் செலவில் 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ நிலைய கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சிக்னல்கள் மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியவுடன் விம்கோ நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை விமான நிலையத்திற்கு 90 நிமிடத்திற்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று முதல் முதல் டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 2வது வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர், அதிவேகமாக மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.