நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் இடையே திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்.

நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


அதன்படி கோவையில் இருந்து டிசம்பர் 8ம் தேதி முதலும, நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 9ம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 8ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

நாகர்கோவிலில் இருந்து இரவு 9:45க்கு புறப்படும், 02667 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 07:15க்கு கோவை வந்து சேரும். 

மறுமார்கத்தில் கோவையில் இருந்து இரவு 7:30க்கு புறப்படும் 02668 நாகர்கோவில் சிறப்பு ரயில், மறுநாள் காலை 05:05க்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு..

⇣⇣ 02668 ⇡⇡ 02667
07:30 PMகோயம்பத்தூர்07:15 AM
20:08/20:10திருப்பூர்06:03/06:05
20:52/20:55ஈரோடு05:12/05:15
21:58/22:00கரூர்04:13/04:15
23:27/23:30திண்டுக்கல்02:57/03:00
00:25/00:30மதுரை01:45/01:50
01:13/01:15விருதுநகர்00:53/00:55
02:43/02:45வாஞ்சி மணியாச்சி23:33/23:35
03:30/03:35திருநெல்வேலி22:55/23:00
04:13/04:14வள்ளியூர்22:15/22:16
05:05 AMநாகர்கோவில்09:45 PM