சென்னை சென்ட்ரலில் இருந்து பீகார் மாநிலம் கயாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கயா ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வண்டி எண் 02389 கயா ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், ஜனவரி 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் காலை 5:30க்கு கயாவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4:10க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில், வண்டி எண் 02390 சென்னை சென்ட்ரல் ➡️ கயா சிறப்பு ரயில், ஜனவரி 5, 12, 29, 26 மற்றும் பிப்ரவரி 2ம் தேதிகளில் காலை 9:15க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10:50க்கு கயா ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

அட்டவணை விவரம் 👇