சென்னை எழும்பூர் 🔄 மன்னார்குடி இடையே விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூர் 🔄 மன்னார்குடி இடையே தினசரி சிறப்பு ரயில்கள் டிசம்பர் 8ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 8ம் தேதி முதலும், மன்னார்குடியில் இருந்து டிசம்பர் 9ம் தேதி முதலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து இரவு 10:15க்கு புறப்படும் 06179 சென்னை எழும்பூர் - மன்னார்குடி சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:25க்கு மன்னார்குடி சென்றடையும்.

மறுமார்கத்தில் மன்னார்குடியில் இருந்து இரவு 10:30க்கு புறப்படும் 06180 மன்னார்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:55க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது மாம்பலம் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.