நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் இடையே தினசரி பகல் நேர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு மதுரை, கரூர், ஈரோடு வழியாக பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 16ம் தேதியும், கோவையில் இருந்து டிசம்பர் 17ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.


வண்டி எண் 06321 நாகர்கோவில் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து காலை 7:35க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:20க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் ➡️ நாகர்கோவில் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 7:25க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8:10க்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் நாங்குநேரி, திருநெல்வேலி, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, கரூர், புகலூர், கொடுமுடி, பாசூர், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், சோமனூர், பிளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில் மார்க்கமாக பயணிக்கும் போது சூலூர் ரோடு, ஈங்கூர் மற்றும் நரிக்கிணர் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 5ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.