நெல்லையில் இருந்து மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், மங்களூர், கோவா வழியாக மும்பைக்கு செல்லும் வராந்திர ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு - தெற்கு ரயில்வே

திருநெல்வேலி 🔄 மும்பை தாதர் இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி நெல்லையில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 13, 20 மற்றும் 27 தேதிகளிலும், மும்பை தாதரில் இருந்து டிசம்பர் 31, ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து காலை 7:15க்கு புறப்படும் 06072 மும்பை தாதர் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3மணிக்கு தாதர் சென்றடையும்.

மறுமார்கத்தில் தாதரில் இருந்து இரவு 8:40மணிக்கு புறப்படும், 06071 திருநெல்வேலி சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 4மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்

மும்பை - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்.