சென்னை - பெங்களூரு - மைசூரு இடையே பூந்தமல்லி, அரக்கோணம் வழியாக அதிவேக ரயில் பாதை : நில அளவை பணிக்கு இணைய வழி மின் ஒப்பந்தம் - என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி 6 வழிதடங்களில் அதிவேக ரயில்கள் இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது.

அதில் சென்னை - பெங்களூரு - மைசூர் தடமும் ஒன்று. இந்நிலையில் சென்னை - மைசூர் இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான நில அளவை பணியை மேற்கொள்ள என்.எச்.எஸ்.ஆர்.சி.எல் டெண்டர் விடுத்துள்ளது.

அதன்படி 450 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையும் இந்த தடத்தில் 7 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

பெங்களூர், மாண்டியா, சென்னபட்னா, பங்காருப்பேட்டை, சித்தூர், அரக்கோணம், பூந்தமல்லி.

முதற்கட்டமாக நில அளவை பணிகளுக்கு நேற்று டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த திட்டத்துக்கான கட்டுமானப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என தெரியவருகிறது.

இந்த தடத்தில் அதிவேக ரயில் இயங்க தொடங்கிய பிறகு பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.