இந்த கூட்டத்தில் அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், தனது பார்சல் சேவைகளுக்கு அதிக வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக ரயில்வே எடுத்துள்ளது என்றும். புதுமைகளை புகுத்துவதன் மூலம் பார்சல் வர்த்தகத்தை விரிவுபடுத்த ரயில்வே முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் விவசாயிகள் ரயில் சேவை உள்ளிட்ட ரயில்வேயின் நடவடிக்கைகளை பாராட்டிய அமைச்சர், பார்சல் பெட்டிகளின் உற்பத்தியை பெருக்கவும், டிஜிட்டல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.